உள்ளூர் செய்திகள்
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சீராக கற்கள் பதிக்காததால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Published On 2022-06-02 16:09 IST   |   Update On 2022-06-02 16:09:00 IST
ெரயில்வே தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
காரமடை,
கோவை மாவட்டம் காரமடையில் கடந்த ஒரு வாரமாக ெரயில்வே தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

அதன் ஒரு பகுதியாக ெரயில்வே தன்டவாளங்கள்  மாற்றி அமைக்க  காரமடை தோலம்பாளையம் ெரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
பராமரிப்பு பணி நடைப்பெற்ற இந்த ெரயில்வே கேட்டினை கடந்து சென்றால் தான்  மருதூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, தேக்கம் பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல முடியும்.

இதனால் இந்த தன்டவாளத்தை எப்போதும் அதிக அளவிலான வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ெரயில்வே கேட்டில் தண்டாவளத்தின் அடிப்பகுதியில் வாகனங்கள் சிரமம் இன்றி செல்ல வசதியாக கற்கள் பதிக்கும் பணியும் நடைபெற்றது.
ஆனால் அப்பணிகளை சீராக  மேற்்கொள்ள படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் காரமடை - தோலம்பாளையம் ெரயில்வே கேட்டினை கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.பெண்கள் அதிக அளவில் விபத்தில் சிக்கி வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் கடந்து செல்ல சரியான முறையில் கற்களை பதிக்காததால் இதுவரை 10க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பாதையை கடக்க முயன்று விபத்தில் சிக்கினர்.

4 சக்கர வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  எனவே பராமரிப்பு பணிகளை முறையாக செய்து விபத்துகளை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News