உள்ளூர் செய்திகள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அரசு பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

திருச்செந்தூரில் இருந்து நாசரேத்துக்கு புறையூர் வழியாக மீண்டும் அரசு பஸ் சேவை-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

Published On 2022-06-02 10:19 GMT   |   Update On 2022-06-02 10:19 GMT
திருச்செந்தூரில் இருந்து நாசரேத்துக்கு புறையூர் வழியாக மீண்டும் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
குரும்பூர்:

திருச்செந்தூரில் இருந்து நாசரேத்துக்கு அங்கமங்கலம், புறையூர் வழியாக இயக்கப்பட்ட டவுன் பஸ் கொரோனாவால் நிறுத்தப்பட்டது. இந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையையடுத்து நேற்று இந்த வழித்தடத்தில் மீண்டும் அரசு டவுன் பஸ் சேவை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆழ்வை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளர் பாதாளமுத்து தலைமை தாங்கினார். ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர் வரவேற்றார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அரசு பஸ்சை கொடிசையத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

இதில் ஏரல் தாசில்தார் கண்ணன், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி ராமஜெயம், கே.டி.சி. பொதுமேலாளர் மேலாளர் சரவணன், உதவி மேலாளர் (இயக்கம்) பூல்ராஜ், நாலுமாவடி கிளை செயலாளர் செந்தில், புறையூர் வெல்பேர் டிரஸ்ட் நாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News