உள்ளூர் செய்திகள்
அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் பலர் தி.மு.க.வில் இணைந்த போது எடுத்த படம்.

தி.மு.க.வுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரிப்பு

Published On 2022-06-01 14:12 IST   |   Update On 2022-06-01 15:32:00 IST
பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தி.மு.க.வுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்துள்ளது என அமைச்சர் மூர்த்தி பெருமிதம் கொள்கிறார்.
புதூர்

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதிய கட்டிடம், புதிய ரேஷன் கடை திறப்பு விழா  நடந்தது.அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.  ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ராஜவேல் மற்றும் ஆலத்தூர் ராஜவேல் வரவேற்றனர்.   கலெக்டர் அனீஷ்சேகர், முன்னிலை வகித்தார். 

விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி அமைந்த ஓராண்டில் தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதிநிலைமை மேம்படுத்தப்பட்டுள்ளது.தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட இப்போது மக்களிடையே   செல்வாக்கு அதிகரித்துள்ளது. 
திராவிட மாடல் என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பரவி விட்டது.   முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். கிராமப்புற மேம்பாட்டுக்காக குடிநீர், மின்சார, சாலை வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

உயர் மின்னழுத்த வசதி   பெரும்பாலான  கிராமப்புறங்களில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மதுரையில் தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் மின்மாற்றி அமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  
இவ்வாறு அவர் பேசினார்.

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை முகமை இணை இயக்குனர் அபிதா ஹனிப், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அரவிந்த், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி,  செயற்பொறியாளர் இந்துமதி, ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் வீரராகவன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நேரு பாண்டியன், ஒன்றிய குழு துணை தலைவர் கார்த்திக் ராஜா, ஆலத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர்  நிறை குளம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரசாமி, சாந்தி   உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தி.மு.க.வில் இணைப்பு விழா நடந்தது. இதில்  அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ராஜவேல்,  ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் உள்பட 400 பேர் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். 

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிறை செல்வம், மாணவரணி அமைப்பாளர் ஆனையூர் மருதுபாண்டி, இளைஞரணி அமைப்பாளர் கூடல் நகர் ராஜா,  ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒத்தக்கடை முருகேஸ்வரி சரவணன், நரசிங்கம் ஆனந்து, பெரியபட்டி குட்டி முத்துக்குமரன், உசிலம்பட்டி நியாதிபதி,கருவனூர் தாமரைச்செல்வி மணிவண்ணன், ஆண்டார் கொட்டாரம் சீமான், காதக்கிணறு செல்வி சேகர், தி.மு.க. நிர்வாகிகள் திருப்பாலை ராமமூர்த்தி, ஆசை வாயன், கண்ணனேந்தல் கவுரிசங்கர், நாகனாகுளம சசிகுமார்,  கவுன்சிலர் ராதிகா, செங்கிஸ்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News