உள்ளூர் செய்திகள்
filephoto

தாயை தாக்கிய மகன் கைது

Published On 2022-06-01 12:19 IST   |   Update On 2022-06-01 12:19:00 IST
தாயை தாக்கிய மகனை போலீசார் கைதுமகன் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
 
புதுக்கோட்டை அருகே மேட்டுபட்டி உடையநோர் காலணியை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி மகமாயி (வயது39). இவரது மகன் சிவா என்கிற சிவக்குமார் (21). 

இவர் மது வாங்குவதற்காக தனது தாயிடம் பணம் கேட்டுள்ளான். அதற்கு மகமாயி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  சிவக்குமார், மகமாயியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார்.

 இதுகுறித்து மகமாயி கொடுத்த புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் வழக்குபதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்
Tags:    

Similar News