உள்ளூர் செய்திகள்
வாகன கையெழுத்து இயக்க பிரசார நிகழ்ச்சியை போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் கொடி அசைத்து தொடங்கி வைத்த காட்சி.

நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில் புகையிலை எதிர்ப்பு தின வாகன கையெழுத்து இயக்க பிரசாரம்

Published On 2022-05-31 15:52 IST   |   Update On 2022-05-31 15:52:00 IST
நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின வாகன கையெழுத்து இயக்க பிரசாரம் தொடங்கப்பட்டது.
நெல்லை:

நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின வாகன கையெழுத்து இயக்க பிரசாரம் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஹாஜி எம்.கே.எம். முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.  கையெழுத்து பிரசார நிகழ்ச்சியை போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

புற்றுநோய் மருத்துவர்கள் தெய்வநாயகம், முகம்மது இப்ராகிம் புகையிலை எதிர்ப்பு தின செய்தியை பற்றி கூறினர்.

நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனையின் டாக்டர்கள் அகம்மது யூசுப்,  பாலா, ஸ்டேன்லி ஜேம்ஸ் மற்றும் செவிலியர்கள், ஷிபா பாராமெடிக்கல் கல்லூரியின் மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஷிபா மருத்துவ மனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் முகம்மது அரபாத் நன்றி கூறினார்.
Tags:    

Similar News