உள்ளூர் செய்திகள்
சைக்கிள் பேரணியை நகர்மன்ற தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

கோவில்பட்டியில் விநியோகஸ்தர்கள் எழுச்சி நாளை முன்னிட்டு சைக்கிள் பேரணி

Published On 2022-05-31 10:06 GMT   |   Update On 2022-05-31 10:06 GMT
கோவில்பட்டியில் விநியோகஸ்தர்கள் எழுச்சி நாளை முன்னிட்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
கோவில்பட்டி:

கோவில்பட்டியில் விநியோகஸ்தர்கள் எழுச்சி நாளை முன்னிட்டு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மாபெரும் விழிப்புனர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.  

பேரணியில் எரிபொருள் உபயோக சிக்கனத்தை வலியுறுத்தியும், பாரம்பரிய வணிகத்தை காக்க வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்க்க வேண்டும், நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும், தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், 

அரசின் கொரோனா விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாரே துண்டு பிரசுரங்களை பாதசாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிச் சென்றனர்.

கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணிக்கு, சங்கத் தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் அசோக், பொருளாளர் பாலசுந்தரம், கவுரவ ஆலோசகர்கள் விஜி, அழகுலட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

பேரணி முக்கிய சாலையான சர்ச் ரோடு, புதுரோடு, எட்டயபுரம் சாலை வழியாக கதிரேசன் கோவில் சாலையில் உள்ள நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகமான கோகுலம் திருமண மண்டபம் வந்தடைந்தது. பின்னர் அங்கு எழுச்சி நாளை நினைவு கூறும் வகையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தினகரன், ரவிசந்திரன், தினேஷ்பாலாஜி, செல்லகனி, ஜெயமணி, ஜெயபாஸ், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்கத்தின் கவுரவ ஆலோசகர் சீனிவாசன் செய்திருந்தார்.
Tags:    

Similar News