உள்ளூர் செய்திகள்
சி.சி.டி.வி. கேமராக்களை கமிசனர் நஜ்மல் ஹோடா தொடங்கி வைத்த காட்சி.

வலசையூர், சுக்கம்பட்டி பகுதிக்கு 126 நவீன சி.சி.டி.வி. கேமராக்கள்

Published On 2022-05-31 09:31 GMT   |   Update On 2022-05-31 09:31 GMT
வலசையூர், சுக்கம்பட்டி பகுதிக்கு 126 நவீன சி.சி.டி.வி. கேமராக்கள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.
அயோத்தியாபட்டணம்:

சேலம் அருகே அயோத்தியாபட்டணத்தை அடுத்த வீராணம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வலசையூர், சுக்கம்பட்டி, டி.பெருமாபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் நடைபெறும் கொலை, கொள்ளை, குற்றச் சம்பவங்களை தடுக்க 126 நவீன சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இதன் பயன்பாட்டை, வலசையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  மாநகர போலீஸ்  கமிஷனர்  நஜ்மல் ஹோடா தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து பேசிய கமிஷனர் ஒரு கேமரா 100 போலீசாருக்கு சமம். கேமராவுக்கு உணவு, தூக்கம், ஓய்வு கிடையாது. கேமரா மூலம் கண்டறியும் குற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் மாடசாமி, மேகன் ராஜ் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வரசி பழனிவேல், சபரிநாதன் (ஏ)சங்கர்,  நரசுஸ்காபி இயக்குனர், கிறிஸ்துவ கலை, அறிவியல் கல்லூரி நிர்வாக இயக்குனர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News