உள்ளூர் செய்திகள்
முடக்கம்

கஞ்சா வழக்கில் கைதானவா்களின் 43 வங்கி கணக்குகள் முடக்கம்

Published On 2022-05-31 07:28 GMT   |   Update On 2022-05-31 07:28 GMT
கஞ்சா வழக்கில் கைதானவா்களின் 43 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்தனர்.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காா்த்திக் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில்  2020-ம் ஆண்டு முதல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை கஞ்சா விற்ற வழக்கில் கைதானவா்களில் 21 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 50 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்படி 80 போ் வரை கஞ்சா விற்றதாக கைதாகி உள்ளனா். அவா்களின் 43 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் கஞ்சா வழக்கில் கைதானவா்களில் 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்டோரின் அசையும், அசையா சொத்துகளையும் முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் கஞ்சா கடத்தலை தடுப்பதற்கும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News