உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கருணாநிதி பிறந்த நாளில் இருளர்கள்- நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும்: அமைச்சர் உத்தரவு

Published On 2022-05-30 11:17 GMT   |   Update On 2022-05-30 11:17 GMT
தமிழக அரசின் ஓராண்டு சாதனை தெருமுனை கூட்டங்கள் நடத்தியும் பிரசாரம் செய்தும் அரசின் சாதனைகளை பொது மக்களுக்கு விளக்க வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.
திண்டிவனம்:

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர ஆலோசனை செயற்குழு  கூட்டம் திண்டிவனத்தில்  நடைபெற்றது. மாவட்ட தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் கருணாநிதி  பிறந்த நாள் விழாவை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

இருளர்கள், நரிக்குறவர்கள், மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உள்ளிட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ஒன்றிய நகர, பேரூர்  செயலாளர்கள் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் அனைத்துப் பகுதிகளும் ஆயிரம் பேருக்கு குறையாமல் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

தமிழக அரசின் ஓராண்டு சாதனை தெருமுனை கூட்டங்கள் நடத்தியும் பிரசாரம் செய்தும் அரசின் சாதனைகளை பொது மக்களுக்கு விளக்க வேண்டும். 18 வயது பூர்த்தி செய்யப்பட்டவர்களை தி.மு.க.வில் இணைக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு கார்டு வாங்கி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்  சேது நாதன், மாசிலாமணி, செந்தமிழ் செல்வன், சீதாபதி சொக்கலிங்கம், திமுக தீர்மான குழு உறுப்பினர் சிவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரமணன், மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் சேகர், நகர செயலாளர்கள் திண்டிவனம் கண்ணன்,செஞ்சி காஜா நசீர், அனந்தபுரம்  சம்பத், சேர்மன்கள் விஜயகுமார், அமுதா ரவிக்குமார், சொக்கலிங்கம், தயாளன், நிர்மலா ரவிச்சந்திரன், யோகேஸ்வரி மணிமாறன், துணை சேர்மன் ராஜாராம் ,பழனி, ஜெயபாலன், ஒன்றிய செயலாளர் மணிமாறன், கவுன்சிலர் அண்ணாதுரை  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News