உள்ளூர் செய்திகள்
வழக்கு

பஸ்சை நிறுத்தி ரகளை செய்த வாலிபர் மீது வழக்கு

Published On 2022-05-30 12:15 IST   |   Update On 2022-05-30 12:15:00 IST
பஸ்சை நிறுத்தி ரகளை செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம்

முதுகுளத்தூரில் இருந்து ஒரு அரசு பஸ் ராமநாதபுரம், தொண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சிதம்பரம் சென்றது. அந்த பஸ் அ.மணக்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது குடி போதையில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ரோட்டின் குறுக்கே நின்று பஸ் டிரைவரிடம் ரகளையில் ஈடுபட்டார்.

அதனை தட்டிக்கேட்ட பஸ் டிரைவர் ஜான்போஸ்கோ (வயது 40) என்பவரை கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அ.மணக்குடியைச் சேர்ந்த கிராமத்தினர் பஸ் நிறுத்தம் அருகே கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பஸ் டிரைவர் ஜான் போஸ்கோ கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட நபரை தேடி வருகிறார். 

Tags:    

Similar News