உள்ளூர் செய்திகள்
நெற்பயிர்கள் மடிந்து கிடப்பதை படத்தில் காணலாம்

கண்டமங்கலம் பகுதியில் திடீர் மழை: அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் மடிந்து விழுந்தது- விவசாயிகள் கவலை

Published On 2022-05-29 17:53 IST   |   Update On 2022-05-29 17:53:00 IST
கண்டமனூர் பகுதியில் திடீரென பெய்த கன மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் மடிந்து விழுந்தன பாய் போட்டது போல மடிந்து காணப்படுகிறது.

கண்டமங்கலம்:

கடந்த சில நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்தது பொதுமக்கள் நிம்மதி அடைந்தார்கள்.

நேற்று காலை முதல் வெயில் வெளுத்து வாங்கியது திடீரென மாலை முதல் மேகத்தில் மாற்றங்கள் காணப்பட்டன. இரவு 8 மணி முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கண்டமனூர் பகுதியில் திடீரென பெய்த கன மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் மடிந்து விழுந்தன பாய் போட்டது போல மடிந்து காணப்படுகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட் டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சமயத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்தால் நெற்பயிர் மடிந்து விவசாயிகளுக்கு பெரிதும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

திடீர் மழையால் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்பயிர்கள் மடிந்து விழுந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News