உள்ளூர் செய்திகள்
வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்
வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் விவரத்தை பதிவு செய்ய வேண்டும் என நகராட்சி தலைவர் தகவல் தெரிவித்தார்.
கீழக்கரை
ராமேசுவரம் வடகாடு கிராமத்தில் இருந்து பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொலை செய்தனர். இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைக்காக தங்கியிருக்கும் வடமாநில இளைஞர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
கீழக்கரை நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில நபர்களை வைத்து வீடு கட்டும் கட்டிட உரிமையாளர்கள், கட்டிட என்ஜினியர்கள், கட்டிட காண்டிராக்டர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள், பானிபூரி மற்றும் குல்பி ஐஸ் தொழில் செய்து வருபவர்கள், உள்ளூர் வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளிமாநில நபர்களின் பெயர், வயது, புகைப்படம், ஆதார் அட்டை, கைபேசி எண், தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயர், தற்போதைய முகவரி நிறுவனத்தின் உரிமையாளர் பெயர், நிறுவன உரிமையாளரின் ஆதார் எண், மொபைல் எண், தற்போதைய இருப்பிட முகவரி ஆகிய விபரங்களை கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் வருகிற
15-ந் தேதிக்குள் சமர்ப்பித்து பதிவு செய்யப்பட வேண்டும்.
தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.