உள்ளூர் செய்திகள்
கைது

நெசப்பாக்கத்தில் மின் வாரிய ஊழியர் மீது தாக்குதல்- பா.ஜனதா பிரமுகர் உள்பட 4 பேர் கைது

Published On 2022-05-28 16:48 IST   |   Update On 2022-05-28 16:48:00 IST
சென்னை நெசப்பாக்கத்தில் மின்வாரிய ஊழியர் மீதான தாக்குதல் தொடர்பாக பாரதிய ஜனதா பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போரூர்:

சென்னை நெசப்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் ஆட்டோ “டிங்கரிங்” கடை நடத்தி வருபவர் ஆனந்த். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரும் மின்வாரிய தற்காலிக ஊழியருமான கோகுல் என்பவருடன் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி விஜயகுமார் என்கிற குல்லா விஜி ஆனந்தின் கடையை மறைத்து வரிசையாக வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதை ஆனந்த், கோகுல் இருவரும் தட்டிக் கேட்டனர் இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மின் வாரிய ஊழியர் கோகுலை சரமாரியாக தாக்கினார். மேலும் கடையில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த கோகுல் கே.கே நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விசாரணை நடத்திய எம்.ஜி.ஆர் நகர் போலீசார் கோகுலை தாக்கிய விஜயகுமார் அவரது நண்பர்களான கோபி, சூர்யா, தனுசன் ஆகிய 4பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசியது உள்பட 3பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News