உள்ளூர் செய்திகள்
புதிய நிழற்குடையை மாணிக்கராஜா திறந்து வைத்தார்.

கயத்தாறு அருகே புதிய நிழற்குடையை யூனியன் தலைவர் மாணிக்கராஜா திறந்து வைத்தார்

Published On 2022-05-28 15:04 IST   |   Update On 2022-05-28 15:04:00 IST
கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமத்தில் புதிய நிழற்குடையை யூனியன் தலைவர் மாணிக்கராஜா திறந்து வைத்தார்.
கயத்தாறு:

கயத்தாறு யூனியனைச் சேர்ந்த அய்யனார்ஊத்து கிராமத்தில் தேவர்குளம் சாலையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புதிய நிழற் குடையை கட்டிடத்தை யூனியன் தலைவர் எஸ்.வி. எஸ்.பி. மாணிக்கராஜா திறந்து வைத்தார். 

நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன், வட்டார கிராம ஊராட்சி ஆணையாளர் பானு, பஞ்சாயத்து தலைவர் சண்முகையா, துணை தலைவர் பாத்திமா பீவி, அ.ம.மு.க. கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதிபாண்டியன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அய்யனார் ஊத்து ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்திற்கான புதிய காம்பவுண்ட் சுவர் கட்டும் பணியைத் பூமி பூஜை போட்டு மாணிக்கராஜா தொடங்கி வைத்தார். 

புதியதாக கட்டப்பட்ட இந்த பள்ளியில் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டினர்.
Tags:    

Similar News