உள்ளூர் செய்திகள்
.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அயோத்தியாப்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் மீது வழக்கு

Published On 2022-05-27 16:41 IST   |   Update On 2022-05-27 16:41:00 IST
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அயோத்தியாப்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணம் பேரூராட்சியில் செயல் அலுவலராக இருப்பவர் கார்த்திகேயன் (வயது 45).

இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சேலம்லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் .

இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததை உறுதி செய்த போலீசார் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி சர்மிளா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள் .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News