உள்ளூர் செய்திகள்
போராட்டம்

நிதி ஒதுக்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

Published On 2022-05-27 09:56 GMT   |   Update On 2022-05-27 09:56 GMT
நிதி ஒதுக்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்

பெரியபட்டினம் ஊராட்சிக்கு நிதி ஒதுக்கா ததை கண்டித்தும், ஊராட்சி பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் தனிநபர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் திருப்புல்லாணி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி, துணைத்தலைவர் பெரோஸ்கான் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 

இதைத்தொடர்ந்து ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரன் போராட்ட த்தில் ஈடுபட்டவ ர்களை அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தி னார். அப்போது ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி ஆணையாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பெரியபட்டினம் ஊராட்சியின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், மக்கள் பணியை தொடர்சியாக செய்யக்கூடாது என்றும் சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்.

இதில் குறிப்பாக பெரிய பட்டினம் காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த ஒரு நபர் ஊராட்சி நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை தொடர்ச்சியாக 50-க்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை அனுப்பி வருகிறார். 

பெரியபட்டினம் ஊராட்சி  குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பி வருகிறார். 

ஆகவே, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு பெரியபட்டினம் ஊராட்சி தொடர்ந்து சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றிட ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News