உள்ளூர் செய்திகள்
பயனாளிகளுக்கு நிவாரணத் தொைகயை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய காட்சி.

மீனவ குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் தடை கால நிவாரணம்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

Published On 2022-05-27 09:34 GMT   |   Update On 2022-05-27 09:34 GMT
மீன்பிடி தடைகாலத்தில் மீனவ குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
உடன்குடி:

கடலில் மீன்வளத்தை பேணிக்காத்திட தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கி ஜூன் 14-ந்தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந்தேதி தொடங்கி ஜூலை 31 வரையிலும் மொத்தம் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அப்போது மீன்பிடி விசைப்படகுகள், இழுவைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000 மீன்பிடி தடைக்கால நிவாரணமாக வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.90 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடிதடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000- வீதம் ரூபாய் 95.00 கோடி வழங்கப்படும்.

இத்திட்டத்தினை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருவள்ளுர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பிடும் வகையிலான ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளம் ஆணையர் டாக்டர் பழனிசாமி மற்றும்மீனவர் நலத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News