உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

புளியரை சோதனை சாவடி வழியாக லோடு வேனில் கடத்திய ரூ.2 லட்சம் லாட்டரி சிக்கியது

Published On 2022-05-27 09:27 GMT   |   Update On 2022-05-27 09:27 GMT
புளியரை சோதனை சாவடி வழியாக லோடு வேனில் லாட்டரி கடத்திய வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை கடத்தி வருவதாக தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் புளியரை இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த வேனில் 4 ஆயிரத்து 620 கேரளா லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வேனில் வந்த புளியரை கட்டளைகுடியிருப்பை சேர்ந்த ராம்குமார்(28), பாட்டாக்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன்(36), கேசவபுரத்தை சேர்ந்த செல்வராஜ்(42) ஆகியோரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 800 ஆகும்.
Tags:    

Similar News