உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கிராம ஊராட்சிகளுக்கு தேவையான நிதியை அரசு வழங்க வேண்டும்

Published On 2022-05-26 09:30 GMT   |   Update On 2022-05-26 09:30 GMT
அரசுக்கு ஊராட்சி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
நெகமம்:

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள் உள்ளது. பெரிய அளவிலான வரி, வருவாய் இல்லாத நிலையில் ஊராட்சிக்கு கிடைக்க வேண்டிய நிதியும் கடந்த சில மாதங்களாகவே மிக குறைவான அளவிலேயே கொடுக்கப்படுவதாகவும், இதனால் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்ற முடியாத நிலை இருப்பதாக ஊராட்சி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
  
இது குறித்து ஊராட்சி நிர்வாகங்கள் தரப்பில் கூறியதாவது:-ஊராட்சியில் சீரான நிலையில் தெருவிளக்குகள், சீரமைப்பு, குடிநீர் குழாய்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கான நிதி இல்லாமல் கடன் வாங்கி செலவு செய்யும் நிலை உள்ளது. மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. குப்பைகளை சுத்தம் செய்வது, குடிநீர் வினியோகம் உள்ளிட்ட தள்ளி வைக்க முடியாத பணிகளே ஊராட்சி வசம் உள்ளது. கடந்த சில மாதங்களாக குறைவான அளவில் வழங்கப்பட்ட நிதி இதுவரை முழுமையாகவே வழங்கப்படவில்லை.
 
வீடு- வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் தூய்மை காவலர்களுக்கு ஊராட்சியின் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களையே தூய்மை காவலர்களாக நியமித்தனர். 

தற்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் தூய்மை காவலளர்கள் நியமித்து பணியாற்றி வருகின்றனர். துப்புரவு பணியில் ஈடுபட பெரும்பாலானோர் விரும்பாத நிலையில் தூய்மை காவலர் திட்டமும், சிக்கலில் இருந்தது. அதைத்தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு சம்பளம் குறைவு மாதம் ரூ.3600 மட்டும் வழங்கப்படுகிறது. இது போதாது என தெரிவித்து வருகின்றனர். 
 
உள்ளாட்சி நிர்வாகங்கள் நிதி நெருக்கடியில் திணறுவ தால் கிராமங்களின் அடி ப்படை தேவைகளை நிறை வேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு ஊராட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஊராட்சிக்கு வழங்கினால் மட்டுமே அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் எவ்வி தமான சிக்கல்களும் இருக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.  

Tags:    

Similar News