உள்ளூர் செய்திகள்
பள்ளியை திறந்து வைத்து அமைச்சர் ராமச்சந்திரன் பேசிய காட்சி.

ஆங்கில பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது-அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு

Published On 2022-05-26 08:31 GMT   |   Update On 2022-05-26 10:50 GMT
இந்த பள்ளியை ஊர் பொதுமக்கள் ரூ.15 லட்சம் செலவில் நவீன மையமாக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கில வழி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. 

தற்போது இந்த பள்ளியை ஊர் பொதுமக்கள் ரூ.15 லட்சம் செலவில் நவீன மையமாக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கில வழி  நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டு பள்ளியை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு தேடி கல்வி திட்டத்தை கொண்டு  வந்துள்ளர். நாடு வளம் பெற வேண்டும் என்றால் கல்வி மிக முக்கியம்.

எனவே ஆங்கில பள்ளிக்கு இணையாக நவீன மையமாக்கப் பட்ட பள்ளி அறைகள், ஸ்மார்ட்  கிளாஸ், நவீன முறையில் இருக்கை வசதி உள்ளிட்ட  வகுப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னாள் இப்பள்ளியில் பயின்ற  மாணவர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இது போன்று பல பள்ளிகளை மேம்படுத்தினால் கல்வி வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார்.
 
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசரூதின், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, ஊராட்சி ஒன்றிய   தலைவர் சுனிதா நேரு, ஜெகதளா பேருராட்சி தலைவர் பங்கஜம்,  தி.மு.க. பொதுகுழு உறுப்பினர் செல்வம் மற்றும் முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News