உள்ளூர் செய்திகள்
பாலசந்திரன்

பா.ஜ.க. நிர்வாகி கொலை - 4 பேரை கைது செய்தது தனிப்படை

Published On 2022-05-26 06:47 IST   |   Update On 2022-05-26 06:47:00 IST
பா.ஜ.க. நிர்வாகி படுகொலை தொடர்பாக விசாரிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
சென்னை: 

சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்திரன் (30). பா.ஜ.,வின் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 7:50 மணிக்கு பாலசந்திரன் தனக்கான பாதுகாப்பு போலீஸ்காரர் பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்குச் சென்றார். அங்கு சிலருடன் பாலசந்திரன் பேசிக் கொண்டிருந்தார். பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்றார்.

அப்போது பைக்கில் வந்த 3 பேர் பாலசந்திரனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பாலசந்திரன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கொலை வழக்கில் தொடர்புடையதாக பிரதீப், அவனது கூட்டாளிகளான கலைவாணணன், ஜோதி, பிரதீப் சகோதரர் சஞ்சய் ஆகிய 4 பேரை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags:    

Similar News