உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் வந்த பெண்ணிடம் ரூ.4 ஆயிரம் அபேஸ்

Published On 2022-05-25 12:04 GMT   |   Update On 2022-05-25 12:04 GMT
சென்னையைச் சேர்ந்த பெண் பக்தர் மணிபர்சை காணவில்லை. கண்காணிப்பு காமிரா பழுதாகி விட்டதால் வேலை செய்யவில்லை.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு  தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சென்னையைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர்  குடும்பத்தினருடன் நேற்று மாலை   சாமி கும்பிட வந்தார். 

அவர் கோவிலுக்குள் சென்று   விட்டு வெளியே வந்து பார்த்தபோது அவரது கைப்பையில் உள்ள ஜிப் திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்   பையை  பார்த்தபோது   மணிபர்சை காணவில்லை. 

அதில் ரூ.4 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த பெண் பக்தர் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து அங்கு நின்ற கோவில் ஊழியர்களிடம் கூறினார். 

அவர்களும் சேர்ந்து காணாமல் போன அந்த மணி பர்சை தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் அந்த மணிபர்சை காணவில்லை. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் புகார் தெரிவித்தார். 

போலீசார் கோவிலில் உள்ள கண்காணிப்பு காமிராவை சோதனை செய்து பார்த்தபோது அந்த கண்காணிப்பு காமிரா பழுதாகி விட்டதால் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த பெண் பக்தர் பணத்தை இழந்து பரிதவித்தபடி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
Tags:    

Similar News