உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஆறுமுகநேரியில் பெண்ணுக்கு கத்திக்குத்து-வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2022-05-25 15:31 IST   |   Update On 2022-05-25 15:31:00 IST
ஆறுமுகநேரியில் இளம்பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி காணியாளர் தெருவில் வசித்து வருபவர் ராஜா (வயது 35). இவரது மனைவி முத்துசெல்வி (33). இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாரியப்பன் (23). மாரியப்பன் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ராஜாவிடம் அடிக்கடி பண உதவி பெற்று வந்தாராம். இதனிடையே இருவருக்குமிடையே கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு நடந்து விரோதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த முத்துசெல்வியிடம் மாரியப்பன் உனது கணவனை எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு முத்துசெல்வி, அவர் கடைக்கு சென்றுள்ளார் என்று பதில் கூறியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மாரியப்பன் தான் வைத்திருந்த கத்தியால் முத்து செல்வியை குத்தியுள்ளார். கையில் பலத்த காயமடைந்த முத்து செல்வி சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்து பலரும் திரண்டு வந்தனர். இதனால் மாரியப்பன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

உடனடியாக முத்துசெல்வி காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப்- இன்ஸ்பெக்டர் பிரபகுமார், இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் மாரியப்பனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News