உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை மாவட்ட கல்குவாரிகளில் 2-வது நாளாக சிறப்பு குழுவினர் ஆய்வு

Published On 2022-05-25 09:58 GMT   |   Update On 2022-05-25 09:58 GMT
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளிலும் இன்று 2-வது நாளாக சிறப்பு குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.
நெல்லை:

நெல்லை அடை மிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் 6 பேர் சிக்கினர். இதில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்தனர்.
 
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளிலும் ஆய்வு நடத்த கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளிலும் நேற்று ஆய்வு தொடங்கியது.

இந்த குவாரிகளை ஆய்வு செய்வதற்காக   6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவினர் இன்று 2-வது நாளாக  குவாரிகளில் ஆய்வு நடத்தினர்.
 
சப்-கலெக்டர் சந்திர சேகர் தலைமையிலான குழுவினரும்,  இதேபோல் கனிமவளத்துறை துணை இயக்குனர் சுமதி, உதவி இயக்குனர் பிரியா, புவியியலாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமையிலாக குழுவினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.

 இதற்கிடையே குவாரி விபத்தில் உயிரிழந்த 4 பேரில்   செல்வக்குமார், ராஜேந்திரன் ஆகியோரது உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.
 
ஆயர்குளத்தை சேர்ந்த முருகன், இளைய நயினார்குளத்தை சேர்ந்த செல்வம் ஆகியோரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இன்று அவர்களது உடல்களை பெற்று செல்ல உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.   
 
முன்னதாக குவாரி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 15 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான காசோலையை முருகன், செல்வம் ஆகியோரது  உறவினர்க–ளிடம் கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

அப்போது ஆர்.டி.ஓ. சந்திரசேகர், நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன்,  தாசில்தார்கள் ஆவுடையப்பன், பால சுப்பிரமணியன், துணை தாசில்தார் மாரிராஜா,  ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News