உள்ளூர் செய்திகள்
விஜயகாந்த்

சென்னையில் 3-ந்தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- விஜயகாந்த் தலைமையில்ஆலோசனை

Published On 2022-05-25 14:12 IST   |   Update On 2022-05-25 14:12:00 IST
மாவட்ட கழக செயலாளர் அனைவரும் தவறாமல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:

தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்கூறி இருப்பதாவது:-

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோனை கூட்டம் கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த்தின் ஆணைக்கிணங்க கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் தலைமையில் வரும் 03.06.2022 வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது.

மாவட்ட கழக செயலாளர் அனைவரும் தவறாமல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News