உள்ளூர் செய்திகள்
பூச்சிக்கொல்லி பாட்டில்கள்

கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 184 பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள்

Published On 2022-05-24 12:24 GMT   |   Update On 2022-05-24 12:24 GMT
கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 184 பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கஞ்சா, போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. 

தற்போது அங்கு பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் இங்கிருந்து அத்தியா வசியமான பொருட்களும் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க கடலோர காவல் படையினர் ராமநாத புரம் மாவட்ட கடல் பகுதியில் தீவிர ரோந்து  மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சாயல்குடி அருகே உள்ள ரிப்பையூர் கடற்கரை பகுதியில் 184 பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் கரை ஒதுங்கின. இதில் 1 லிட்டர் பச்சை கலர் பாட்டில் 70-ம், 1 லிட்டர் வெள்ளை கலர் பாட்டில் 64-ம், அரை லிட்டர் பாட்டில் 50 என மொத்தம் 184 இருந்தது. 

இதனை கைப்பற்றிய கடலோர காவல்படை போலீசார் இங்கிருந்து இலங்கைக்கு கடத்தும்போது கடலில் தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்திலும், கடத்திச் சென்றது யார்? என்பதும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News