உள்ளூர் செய்திகள்
வணிகர் சங்கத்தினர் ரெயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற காட்சி.

ஆத்தூர்-விருத்தாசலம் பயணிகள் ரெயிலுக்கு வணிகர் சங்கத்தினர் வரவேற்பு

Published On 2022-05-24 10:26 GMT   |   Update On 2022-05-24 10:26 GMT
சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக விருத்தாசலம் ரெயில் மீண்டும் இயக்கியதற்கு வணிகர் சங்கத்தினர் பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக சேலத்திலிருந்து விருதாசலத்திற்கு 2 பயணிகள் ரெயில்  இயக்கப்பட்டு வந்தன.கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. 2  ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.

இதனால் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆத்தூர் வணிகர் சங்க தலைவர் ரவிசங்கர் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் ரெயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
ரெயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

வணிகர் சங்கத் தலைவர் ரவிசங்கர் கூறும்போது, சேலம்- விருத்தாச்சலம் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் கோயம்புத்தூரில் இருந்து ஆத்தூர் வழியாக எழும்பூருக்கு பகல் நேரம் சென்னை செல்ல புதிய ரெயில் ஒன்றை இயக்க வேண்டும். பெங்களூர் காரைக்கால் ரெயில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதை மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News