உள்ளூர் செய்திகள்
புளியங்குடியில் 100 பேருக்கு இலவச ஆடுகள்
புளியங்குடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஏழைகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது.
புளியங்குடி:
புளியங்குடி கால்நடை மருத்துவமனையில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் ஆதரவற்ற பெண்கள் ஒருவருக்கு 5 ஆடுகள் வீதம் 100 பேருக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச ஆடுகள் வழங்கப்பட்டன.
நிகழ்சிக்கு சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் விஜயாசவுந்திர பாண்டியன், நகர்மன்ற துணைத்தலைவர் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மகேஸ்வரி திட்ட விளக்க உரையாற்றினார்.
சிந்தாமணி கால்நடை மருத்துவர் கருப்பையா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லதுரை கலந்து கொண்டு 100 பெண் பயனாளி களுக்கு ஆடுகளை வழங்கி னார்.
இதில் கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபிபூர் ரக்மான், யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் மற்றும் எராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.