உள்ளூர் செய்திகள்
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 1000 டாக்டர்களுக்கு இடமாறுதல்

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 1000 டாக்டர்களுக்கு இடமாறுதல்

Published On 2022-05-24 10:09 GMT   |   Update On 2022-05-24 10:09 GMT
ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது.
சென்னை:

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவ பணிகள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது.

இன்று முதல் 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் கலந்தாய்வில் தமிழகம் முழுவதும் இருந்து மருத்துவர்கள் கலந்து கொண்டு இடங்களை தேர்வு செய்கின்றனர்.

பணி சீனியாரிட்டி அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந் தாய்வுக்கு அழைக்கப்பட்ட னர். வெளிப்படையாக காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு அந்த இடங்களை தேர்வு செய்யும் வகையில் இக்கலந்தாய்வு நடக்கிறது.

கலந்தாய்வு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு மேற்பார்வையில் நடந்தது. இடங்களை தேர்வு செய்த டாக்டர்களுக்கு இன்று மாலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இடமாறுதல் ஆணையை வழங்குகிறார்.

ஜூன் 2-ந்தேதி பிற மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
Tags:    

Similar News