உள்ளூர் செய்திகள்
கோட்டாட்சியரிடம் மனு அளித்த போது எடுத்தப்படம்.

கோரிக்கை மனுவிற்கு உடனடி நடவடிக்கை

Published On 2022-05-24 14:58 IST   |   Update On 2022-05-24 14:58:00 IST
பா.ம.க.வினர் அளித்த கோரிக்கை மனுவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
திருச்சி:

பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் வீரராகவன், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவனிடம் மனு ஒன்று கொடுத்தார். 

அதில் கூறியிருப்பதாவது. தொட்டியத்தை அடுத்த நத்தம் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருவதாகவும் நத்தம் பாலம் என்ற இடத்தில் இருந்து பாசன வாய்க்கால் வந்துகொண்டிருந்தது. 

அந்த இடத்தில் வாய்க்காலை மூடிவிட்டு, அதன் அருகிலேயே புதிய வாய்க்கால் அமைத்து வருகின்றனர். புதியதாக அமைத்து வரும் வாய்க்காலில் இருந்து தரமான மண்ணை வெட்டி எடுத்து, நத்தம் பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் கொட்டி வருவதாகவும், 

சுமார் 70 நாட்களாக தோண்டி எடுக்கப்பட்ட தரமான மண்ணை, அரசுக்கு சொந்தமான இடத்தில் ,அரசு மேற்பார்வையில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

 கோரிக்கை மனுவை பெற்ற கோட்டாட்சியர் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி கூறினார்.

Tags:    

Similar News