உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவையில் தனியார் பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கும்பல்

Published On 2022-05-23 16:11 IST   |   Update On 2022-05-23 16:11:00 IST
போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 3 பேரை தேடி வருகிறார்கள்.
கோவை:
 
மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது34). இவர் காந்திபுரத்தில் இருந்து ராஜபாளையம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு காந்திபுரத்தில் இருந்து பஸ் புறப்பட தயாராக இருந்தது. இதையடுத்து டிரைவர் பால்பாண்டி பஸ்சில் புக் செய்தவர்களை போன் செய்து அழைத்து கொண்டிருந்தனர்.
 
அப்போது ராஜ பாளையத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் போன் செய்தார். அவர் தான் பஸ்சில் பயணம் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாகவும், ஒண்டிப்புதூர் பகுதியில் தன்னை ஏற்றி கொள்ளும் படியும் கூறினார். அதற்கு டிரைவர், சிங்காநல்லூர் வந்து ஏறி கொள்ளுங்கள் என கூறிவிட்டார்.

இதையடுத்து பஸ் சிங்காநல்லூர் சென்றது. அப்போது அங்கு கணேஷ் வந்தார். அவர் குடிபோதையில் இருந்தார். அவர்,  எனது சீட் எங்கு உள்ளது என டிரைவரிடம் கேட்டார். அவர் உள்ளே சென்று நம்பரை பார்த்து அமருமாறு கூறினார். ஆனால் அவர் செல்ல மறுத்து டிரைவருடன் தகராறில் ஈடுபட்டார்.
 
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த கணேஷ், திடீரென டிரைவர் பால்பாண்டியை தாக்கினார். மேலும்  தனது நண்பர்கள் 2 பேரை வரவழைத்து, மீண்டும் டிரைவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடினார்.இதுகுறித்து பால்பாண்டி சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கணேஷ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News