உள்ளூர் செய்திகள்
நாணய கண்காட்சி

டாப்சிலிப்பில் வன உயிரின நாணய கண்காட்சி

Published On 2022-05-23 16:10 IST   |   Update On 2022-05-23 16:10:00 IST
பல்வேறு நாடுகளின் 160 கரன்ஸி நோட்டுக்கள், 200-க்கும் அதிகமான நாணயங்கள், 400-க்கும் அதிகமான தபால்தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன
பொள்ளாச்சி:
 
மே 22-ந்் தேதி சர்வதேச பல்லுயிர் பெருக்க தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பில் வனச்சரக அலுவலர் காசிலிங்கம் ஏற்பாட்டில் நாணய கண்காட்சி நடைபெற்றது.

நாணய சேகரிப்பில் கின்னஸ் சாதனை படைத்த பொள்ளாச்சியை சேர்ந்த முரளி பங்கேற்றார். ஆஸ்திரேலியா, கென்யா, வெனிசுலா, தென்ஆப்ரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்படுத்தும் வன உயிரினங்கள் படம் பொறித்த நோட்டுக்கள், நாணயங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. 

பல்வேறு நாடுகளின் 160 கரன்ஸி நோட்டுக்கள், 200-க்கும் அதிகமான நாணயங்கள், 400-க்கும் அதிகமான தபால்தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. 1000-க்கும் அதிகமானோர் நாணய கண்காட்சியில் பங்கேற்றனர். கண்காட்சியை பொள்ளாச்சி கோட்ட துணை இயக்குனர் கணேசன், வனச்சரக அலுவலர் காசிலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

Tags:    

Similar News