உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பணகுடி நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2022-05-23 15:28 IST   |   Update On 2022-05-23 15:28:00 IST
பணகுடி நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணகுடி:

 நெல்லை மாவட்டம் பணகுடி நான்கு வழி சாலையில் இருந்து தண்டையார் குளம் செல்வதற்கு பிரிவு சாலை உள்ளது. இன்று காலை இந்த பிரிவு சாலையில் கீழ்புறம் இருந்து பணகுடி ஊருக்கு கரையடி காலனியை சேர்ந்த தொழிலாளி ஹரிகிருஷ்ணன் ( வயது 60)  என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருச்சியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
 இதில் ஹரி கிருஷ்ணன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் விரைந்து சென்று ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை பணகுடி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News