உள்ளூர் செய்திகள்
கள்ளிக்குடி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

கள்ளிக்குடி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெண்கள்

Published On 2022-05-23 09:52 GMT   |   Update On 2022-05-23 09:52 GMT
கள்ளிக்குடி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெண்கள்.
திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.வெள்ளாகுளம் பஞ்சாயத்து சுந்தரங்குண்டு கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கண்மாய் பகுதியை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பணிபுரியும் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இன்று கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி செய்யும் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு குடும்பத்தின ருக்கும் பணிகள் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போரா ட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:-
 
தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணி புரிபவர்களுக்கு பழைய அட்டையை புதுப்பித்து புதிய அட்டை வழங்கு வதற்கான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது.

இதேபோல் சுந்தரங் குண்டு கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்  களுக்கான பதிவு புதுப் பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதில் பழைய அட்டைக்கு பதிலாக புதிய அட்டை வழங்க 200 ரூபாய் வழங்க வேண்டு மெனவும், புதிதாக பணியில் சேர்பவர்கள் அட்டைக்கு 500 ரூபாய் வழங்க வேண்டுமெனவும்  நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் பணி நடைபெறும் நாட்களில் பணிக்கு வரும் ஒவ்வொருவரும் 5 ரூபாய் கொடுத்து விட்டுத்தான் வேலையை பார்க்க வேண்டும் என கூறி ஒவ்வொருவரிடமும்  ஐந்து ரூபாய்க்கு பெறுகிறார்கள்.  

இதன் மூலம் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் செல்கிறது. இதற்கு ஊராட்சி செயலாளர் தான் காரணம்.

அதோடு ஊராட்சி செய லாளர் மற்றும் பொறுப்பா ளர்கள் 100 நாள் வேலை செய்வோரின் பணிகளை குறை செல்வதோடு, பெண்கள் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கலெக்டர் விசாரண நடத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
 
போராட்டம் தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை கைவிடப்பட்டது.
Tags:    

Similar News