உள்ளூர் செய்திகள்
மரணம்

திருப்பூர் அருகே பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி பெண் -சிறுமி பலி

Published On 2022-05-23 15:02 IST   |   Update On 2022-05-23 15:02:00 IST
திருப்பூர் அருகே இன்று பாறைக்குழி தண்ணீர் மூழ்கி பெண் மற்றும் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் பெருமாநல்லூர் கணக்கம்பாளையம் செல்லும் பாதையில் பாறைக்குழி உள்ளது. இன்று காலை பாறைக்குழி தண்ணீரில் பெண் மற்றும் ஒரு சிறுமி பிணமாக கிடப்பதாக பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்கள் குறித்து விசாரிக்கும் போது கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த உமா (வயது 28), காவ்யா(15) என்பது தெரியவந்தது.

பாறைக்குழியில் இறங்கி குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்றதன் காரணமாக தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி 2பேர் பலியான சம்பவம் திருப்பூர் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News