உள்ளூர் செய்திகள்
கலப்பட டீ தூள், குட்கா பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

Published On 2022-05-23 06:39 GMT   |   Update On 2022-05-23 06:39 GMT
திருக்கோஷ்டியூர் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்து ரூ. 1 லட்சம் உணவு பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கலப்படமான டீத்தூள், கலர் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள், குட்கா உள்ளிட்டவைகளை விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகனுக்கு தகவல் கிடைத்தது. 

 இதனையடுத்து  திருக்கோஷ்டியூர் பகுதிகளில் உள்ள மளிகை கடை, உணவகங்கள், பெட்டிக்கடை, பேக்கரிகள் உள்ளிட்டவைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. 

அப்போது  ரூ.1 லட்சம் மதிப்பிலான விற்பனை செய்யப்பட்ட உணவு பொருட்கள், கலப்பட டீ தூள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டு   பறிமுதல் செய்யப்பட்டன. 

இதில் சுமார் 100 கிலோ டீத்தூள், 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  பெட்டிக்கடையில் பான்ம சாலா விற்கப்பட்டதையும் கண்டுபிடித்த உணவு பாதுகாப்பு அலுவலர்  அவற்றையும் பறிமுதல் செய்தார். மேலும்  மளிகை கடைக்காரர் மற்றும் அந்த பகுதி மக்கள் மத்தியில் போலி டீத்தூளை கண்டுபிடிக்கும் முறையினை செய்து காண்பித்தார். 

இந்த நிகழ்வின் போது உணவு பாதுகாப்புதுறை உதவியாளர்கள் மாணிக்கம், மன்சூர், ஆரிப் ஆகியோர்   இருந்தனர்.

Tags:    

Similar News