உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு- அமைச்சர் தகவல்

Published On 2022-05-22 14:21 IST   |   Update On 2022-05-22 14:21:00 IST
மக்களைத்தேடி மருந்துவம் திட்டத்தில் 4,848 செவிலியர்கள் ஊதியம் 14ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்படும்.

சென்னை:

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குத்துச்சண்டை வீரர் பாலாஜியை நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரித்தார்

பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கையின் படி 5, 971 பேருக்கு 32கோடி மதிப்பில் 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது என்றும் மக்களைத்தேடி மருந்துவம் திட்டத்தில் 4,848 செவிலியர்கள் ஊதியம் 14ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்படும்.

அதேபோல் 2,448 முன்களப் பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு 11ஆயிரம் ரூபாயிரத்தில், 3 ஆயிரம் உயர்த்தி 14ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும் ஒப்பந்தத்தில் பணியாற்றும் மகளிருக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News