உள்ளூர் செய்திகள்
தஞ்சை அரசு குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

Published On 2022-05-20 15:38 IST   |   Update On 2022-05-20 15:38:00 IST
தஞ்சை அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில்  யூத் ரெட் கிராஸ்  தன்னார்வ லர்களான மாணவிகளுக்கு ஒரு நாள் பேரிடர்மேலா ண்மை பயிற்சி வழங்கப்ப ட்டது.

பாரதிதாசன்பல்கலை க்கழக துணைவேந்தர் செல்வம்  வழிகாட்டு தலின்படி,  தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன் ஆலோசனையின் பேரில் நடந்த இந்த நிகழ்வை பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல்  தொடக்கி வைத்து பேசினார். அவரைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியின் பேராசிரியருமான முருகா னந்தம் வாழ்த்துரை வழங்கினார். 

இதில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியின் முதல்வர் சிந்தியா செல்வி, பேராசிரியர்  சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஒருநாள் பேரிடர் மேலாண்மை பயிற்சியை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் பேரிடர் மேலாண்மை பயிற்றுநர் ஜான்பெஞ்சமின்  தன்னார்வலர்களுக்கு வழங்கினார். 

இந்த பயிற்சியில் 130 யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களான மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். 
அவர்களுக்கு பேரிடர் நேரங்களில் எப்படி தங்களையும் காத்து மற்றவர்களையும் காப்பாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு செயல்முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை  குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்  கிருஷ்ணபிரியா செய்திருந்தார்.

Similar News