உள்ளூர் செய்திகள்
படுகாயம்

அச்சரப்பாக்கம் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது: கணவன்-மனைவி படுகாயம்

Published On 2022-05-17 15:30 IST   |   Update On 2022-05-17 15:30:00 IST
அச்சரப்பாக்கம் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த தம்பதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுராந்தகம்:

அச்சரப்பாக்கம் அருகே உள்ள இந்தலூர் ஊராட்சி, பெரியார் நகரில் வசிப்பவர் முருகேசன் (வயது 57). விவசாய கூலித் தொழிலாளி.

இவரது மனைவி அஞ்சலை (54). அவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அரசால் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்தப் பகுதியில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் 5 வீடுகள் மட்டுமே உள்ளன. இதில் இரண்டு வீட்டில் மட்டும் மக்கள் வசிக்கின்றனர். முருகேசன் மிகவும் பழுதடைந்த தனது தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அவரது வீடு மேலும் சேதம் அடைந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கினர். நள்ளிரவு அவர்களது வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த முருகேசனும் அவரது மனைவி அஞ்சலையும் பலத்த காயம் அடைந்தனர்.

வீடு இடிந்து விழுந்த சத்தம் கேட்ட அருகில் வசித்து வந்தவர்கள் படுகாயம் அடைந்த முருகேசன் அவரது மனைவி அஞ்சலையை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News