உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

அசோக்நகரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி

Update: 2022-05-15 06:21 GMT
அசோக்நகரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

சென்னை கீழ்ப்பாக்கம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் இவரது மகன் மகா விஷ்ணு (வயது 25) சாப்ட்வேர் என்ஜினீயர். அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் இஜாஸ் அகமது (23) இருவரும் நண்பர்கள்.

இன்று அதிகாலை 4.30 மணி அளவில் நண்பர் இரண்டு பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அசோக்பில்லர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். உதயம் தியேட்டர் சந்திப்பு அருகே வந்தபோது அவ்வழியாக சென்ற ஆட்டோவை மகா விஷ்ணு முந்தி செல்ல முயன்றார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வேகத்தடை மீது ஏறியதில் நிலை தடுமாறி அருகில் இருந்த “பேரிகார்ட் தடுப்பு” மீது வேகமாக மோதியது.

இதில் மகா விஷ்ணு, இஜாஸ் அகமது ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர்.

இதில் தலையில் படுகாயமடைந்த மகா விஷ்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இஜாஸ் அகமது பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News