உள்ளூர் செய்திகள்
ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி பெண்ணிடம் 55 பவுன் நகை பறிப்பு- சாப்ட்வேர் என்ஜினீயர் கைது
கேளம்பாக்கம் அருகே ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி பெண்ணிடம் 55 பவுன் நகை பறித்த சாப்ட்வேர் என்ஜினீயரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கம் அருகே செங்கண்மால் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமான சாப்ட்வேர் பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் (30) என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் தனது மனைவியுடன் வசிக்கிறார். அவருடைய குடியிருப்புக்கு எதிரே சென்னை தரமணியில் பணிபுரியும் கணவன்-மனைவி வசித்து வருகின்றனர்.
காசி விஸ்வநாதன் மனைவி வேறொரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர் தினமும் வேலைக்கு சென்று விடுவார். அதேபோன்று எதிர் வீட்டில் வசித்த வாலிபர் தரமணிக்கு வேலைக்கு செல்வார். காசி விஸ்வநாதன் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை பார்த்து வந்தார். அப்போது எதிர் வீட்டில் வசித்த பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் பலமுறை ஒன்றாக இருந்து. அதை தனது செல்போனில் காசி விஸ்வநாதன் படம் பிடித்துள்ளார்.
பின்னர் அதை ஆன்லைனில் வெளியிடுவதாகவும், உனது கணவரிடம் சொல்லி விடுவேன் என்றும் கூறி அந்த பெண்ணை மிரட்டி பலமுறை அவருடன் ஒன்றாக இருந்துள்ளார். மேலும், அவ்வப்போது தனது செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி உள்ளார்.
ஒரு கட்டத்தில் பணம் இல்லாததால் அந்த பெண் தனது நகைகளை கொடுத்துள்ளார். 55 பவுன் நகைகளுக்கு மேல் கொடுத்து விட்ட பிறகும் மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் வேறு வழியின்றி அந்த பெண் தனது கணவரிடம் உண்மையை கூறி உள்ளார். இதையடுத்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து காசி விஸ்வநாதனை கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் காசி விஸ்வநாதனின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த பெண்ணிடம் இருந்து வாங்கிய நகைகளை விற்று ஜாலியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காசி விஸ்வநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.