உள்ளூர் செய்திகள்
தமிழக கவர்னர் ஆர்என் ரவி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ‘திடீர்’ டெல்லி பயணம்

Update: 2022-05-14 03:02 GMT
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட முறையில் டெல்லி சென்றுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். காலை 10.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். நாளை இரவு 8.45 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

அரசியல் பரபரப்பு நிலவி வரும் நிலையில் கவர்னரின் டெல்லி பயணம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் டெல்லியில் கவர்னர் யாரை சந்திக்க உள்ளார் என்ற விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் டெல்லி சென்றுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளை மறுநாள் (திங்கள்) சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி இருவரும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News