உள்ளூர் செய்திகள்
குரோம்பேட்டையில் கார் தீப்பிடித்து எரிந்தது: கணவன்-மனைவி உயிர் தப்பினர்
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலையில் வந்த போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கரும், அவரது மனைவியும் உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினர்.
தாம்பரம்:
ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் இன்று காலை மனைவியுடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலையில் வந்த போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கரும், அவரது மனைவியும் உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காரில் தீப்பற்றிய உடன் சங்கரும் அவரது மனைவியும் இறங்கியதால் உயிர் தப்பினர். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.