உள்ளூர் செய்திகள்
விபத்து

திருக்கழுக்குன்றம் அருகே அரசு பஸ்-கார் மோதல்: கல்லூரி மாணவர் பலி

Published On 2022-05-13 12:58 IST   |   Update On 2022-05-13 12:58:00 IST
திருக்கழுக்குன்றம் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கபிலன் (வயது22). தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரிக்கு காரில் செல்வது வழக்கம்.

இன்று காலை அவர் வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். காலை 7 மணியளவில் திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்றபோது, சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய கபிலன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்ததும் திருக்கழுகுன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.

கபிலனின் உடல் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான கபிலன், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்மணியின் மகள் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News