உள்ளூர் செய்திகள்
கைது

மாமல்லபுரம் சிற்ப கூடத்தில் சாமி கற்சிலைகளை திருடிய திருநங்கை கைது

Published On 2022-05-12 11:40 IST   |   Update On 2022-05-12 11:40:00 IST
மாமல்லபுரம் சிற்ப கூடத்தில் சாமி கற்சிலைகளை திருடிய திருநங்கையை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் சாமி சிலைகளை பறிமுதல் செய்தனர்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம், தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் ருக்மாந்கதன் என்பவர் கருங்கல் சிலைகள் செதுக்கும் கூடம் வைத்துள்ளார். இந்த சிற்ப கூடத்தில் இருந்த அம்மன், மதுரை வீரன், அயகிரிவரர் உள்ளிட்ட மூன்று சாமி சிலைகள் திருடு போனது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இது தொடர்பாக பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த திருநங்கையான சந்திரலேகாவை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலை திருட்டுக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளி புகழ் என்பவரை தேடி வருகின்றனர். மோட்டார்சைக்கிள் மற்றும் சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News