உள்ளூர் செய்திகள்
ராதாகிருஷ்ணன்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சி- போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்ட இடம் தேர்வு

Published On 2022-05-10 09:35 GMT   |   Update On 2022-05-10 09:35 GMT
புதிய அலுவலகங்கள் கட்டப்பட உள்ள‌ இடத்தை இன்று காலை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

தாம்பரம்:

புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு கட்டிடம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்ட தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் சித்த மருத்துவமனை மற்றும் காசநோய் ஆஸ்பத்திரியின் இடங்களுக்கு நடுவே உள்ள நிலத்தில் இடம் ஒதுக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. 5 ஏக்கர் நிலத்தில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக 4.3 ஏக்கர் நிலத்தில் தாம்பரம் மாநகராட்சி அலுவலக கட்டிடமும் அமைய இருக்கிறது.

புதிய அலுவலகங்கள் கட்டப்பட உள்ள‌ இடத்தை இன்று காலை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மருத்துவ துறை இயக்குனர் நாராயண பாபு, காசநோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா. மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், மண்டலத் தலைவர் காமராஜ் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News