உள்ளூர் செய்திகள்
மத்திய மந்திரி எல்.முருகன் யோகா பயிற்சி செய்த போது எடுத்தபடம்

மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் யோகா

Published On 2022-05-09 14:18 IST   |   Update On 2022-05-09 14:18:00 IST
கிருஷ்ன யோகமந்திரம், உஸ்டாசனம், வஜீராசனம், திரிகோராசனம், வக்ராசனம், கபாலபதி, நாடிசுத்ரி, பிராமரி பிரானயம் உள்ளிட்ட யோகா பயிற்சி கொடுக்கப்பட்டது.

மாமல்லபுரம்:

ஜூன் மாதம் 21ந்தேதி உலக யோகா தினத்தை கொண்டாடும் வகையில் “யோகா உத்சவம்” என்ற பெயரில் நிகழ்ச்சியை மத்திய அரசு நாடு முழுவதும் நடத்தி வருகிறது.

இதன் 43வது நிகழ்ச்சியாக மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் மாமல்லபுரத்தின் முக்கிய புராதன சின்னமான கடற்கரை கோயில் வளாகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் மத்திய மந்திரி எல்.முருகன், மத்திய மீன்பண்ணை சேர்பர்சன் அமர்சிங் சவ்கானா, கால்நடை மற்றும் மீன்வளத்துறை இணை செயலர் ஜவ்கார், மீன்வளத்துறை உறுப்பினர் செயலர் கிர்பா, மீன்வளத்துறை நலவாரிய ஆணையர் பழனிச்சாமி, அதிகாரி அந்தோணி சேவியர், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

யோகா நிகழ்ச்சி இன்று காலை 6:30க்கு தொடங்கி 8மணி வரை நடைபெற்றது. இதனை கே.எம்.யோகாலயா, அபிராமி யோகாலயா அமைப்பினர் நடத்தினர்., கிருஷ்ன யோகமந்திரம், உஸ்டாசனம், வஜீராசனம், திரிகோராசனம், வக்ராசனம், கபாலபதி, நாடிசுத்ரி, பிராமரி பிரானயம் உள்ளிட்ட யோகா பயிற்சி கொடுக்கப்பட்டது.

மத்திய மந்திரி எல்.முருகன் உள்பட அனைவரும் கடற்கரை கோவில் பின்னணியில் யோகா பயிற்சி செய்தனர். முன்னதாக எல். முருகன் பேசியதாவது:

பிரதமர் மோடியும், சீன அதிபரும் இந்த இடத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த மாமல்லபுரத்தில் யோகா உத்சவ் நிகழ்ச்சி நடப்பது பெருமை வருகிற ஜூன் 1ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

சர்வதேச அளவில், சர்வதேச யோகா தினமாக அறிவிப்பிற்கு இதை எடுத்துச்சென்ற பெருமை பிரதமர் மோடியை சேரும். இந்தியாவில் பிறந்த கலை இன்றைக்கு உலகம் முழுவதும், அத்தனை நாடுகளிலும் யோகாகலை பின்பற்றி கொண்டு இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் யோகாக்கலை உலகமெங்கும் சென்று சேர்ந்து இருக்கிறது.

யோகா நம்முடைய மனதை பலப்படுத்துகிறது. பல்வேறு வியாதிகளுக்கு தீர்வாக இருக்கிறது. இன்றைய வாழ்க்கை முறை நம்முடைய அவசர வாழ்க்கை முறை உணவுப் பழக்கங்கள் மொத்தமாக நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கெண்டு இருக்கின்றன. நம்முடைய ஆரோக்கியம் பேணுவதற்கு யோக ஒரு முக்கிய கலையாக உள்ளது. பல வியாதிகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு யோக ஒரு முக்கிய கலையாக இன்றையக்கு தெரிந்து கொண்டு இருக்கிறது.

பாரததேசத்தில் தோன்றிய கலை இன்றைக்கு உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து இருப்பது நமக்கெல்லாம் பெருமை.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News