உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச்சங்க மாநாடு
வேதாரண்யத்தில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச் சங்க மாநாடு நடைபெற்றது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதா ரண்யத்தில் நாகை மாவட்ட பாரதி மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச்சங்கத்தின் 14வது மாநாடு மாவட்ட தலைவர் அமரேசன் தலைமையில் நடைபெற்றது.விழாவில் நகர மன்ற தலைவர் புகழேந்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணைத் தலைவர் எஸ். எஸ்.தென்னரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு நல அலுவலகம் தனிக் கட்டிடம் அமைக்கப்பட வேண்டும், பச்சிளம் குழந்தைகளுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நடமாடும் சிகிச்சை மைய வாகனம் கிராமங்களுக்குச் சென்று சேவையை தொடங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்கூடம் மீண்டும் அமைக்கப்பட வேண்டும், தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.