உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- மீனவர் பலி

Update: 2022-05-06 06:50 GMT
கல்பாக்கம் அருகே விபத்தில் மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அடுத்த உய்யாலி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (வயது33). மீனவர். இவர் மீன்பிடி வலைகள் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் கோவளம் நோக்கி சென்றார். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் சென்றோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெகன்ராஜ் பலியானார்.

Tags:    

Similar News