உள்ளூர் செய்திகள்
தகட்டூர் அரசு பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக அளித்த கிராமமக்கள்.

பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக அளித்த கிராம மக்கள்

Published On 2022-05-04 06:46 GMT   |   Update On 2022-05-04 06:46 GMT
வேதாரண்யம் தாலுகா தகட்டூர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக அளித்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம்அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக அளித்த சம்பவம் சுற்று வட்டார கிராமங்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 வேதாரண்யம் தாலுகா தகட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட மலையன்காடு கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கையை  அதிகரிக்கும்  வகையில் கிராம மக்கள் "நம் பள்ளி" "த ம்பெருமை" என்ற முழக்கத்துடன் மேளதாளங்கள் முழங்க பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசை யாக கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

இதில் இன்டர்நெட் வசதிகளுடன் கூடிய தொலைகாட்சி பெட்டி தண்ணீர் சுத்திகரிப்பான்  குழந்தைகளுக்கு தேவை யான விளையாட்டுபொரு ட்கள், சேர், மற்றும்மின்வி சிறி உள்ளிட்ட ரூபாய் இரண்டுலட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட 125 பொருட்களை வழங்கினார்.

பின்பு 1950 ல் தொடக்கபட்ட இப் பள்ளியில் நடைபெற்ற முதன்முதலாக நடை பெற்றஆண்டு விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மாரிமுத்து தலைமை வகித்தார் விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், ராமலிங்கம் கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன் மாவட்ட கவுன்சிலர் சுப்பையன் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கோவிந்தசாமி, சந்திர சேகரன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் விழா முடிவில் பள்ளி ஆசிரியர் விரசேகரன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News